இந்தியா

இனி சில்லறை இனிப்புகளுக்கும் தயாரிப்பு தேதி கட்டாயம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடைகளில் சில்லரையாக விற்கப்படும் இனிப்புகளிலும் தயாரிப்பு தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கடைகளில் சில்லறையாக விற்கப்படும் இனிப்பு வகைகள் சில நேரங்களில் கெட்டுப் போவது கூட தெரியாமல் விற்கப்படுவது உண்டு. இதனால் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திற்கு அதிகளவிலான புகார்கள் வந்ததை தொடர்ந்து புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இனிப்புக்கு தயாரிப்பு தேதி குறிப்பிடுவது கட்டாய நிலையில் இருப்பது போல், இனி சில்லறை இனிப்புகளுக்கும் தயாரிப்பு தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  "கோடியில் ஒருவன்" படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

மேலும் இந்த அறிவிப்பு ஜூன் 1ம் தேதியிலிருந்து கட்டாயமாக்கப்படுவதாகவும், தயாரிப்பு தேதி குறித்த அறிவிப்பை இனிப்புகளை வைக்கும் பொருள்களில் எழுதி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதிமுறை நடைமுறையை படுத்தப் படுகிறதா என்பதை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கண்காணிக்க வேண்டும் எனவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன நாட்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை… எவை எவை தடை செய்யப்பட்டுள்ளன??

naveen santhakumar

என்ன சொல்றீங்க… கேஸ் விலை உயர்வின் பின்னணி இதுதானா?

Admin

மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு..!

naveen santhakumar