இந்தியா

சிறுநீர் பானிபூரியா? கம்பி எண்ணும் பையா- அதிர்ச்சி வீடியோ…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகளவில் சாலையோரக் கடைகளுக்கு என்றுமே மவுசு ஜாஸ்தி தான். அதுவும் இந்தியாவில் சொல்லவே வேண்டாம்.

Ragda Puri Chaat Recipe - Ragda Puri Recipe - Easy Chaat Recipes

ஏனென்றால் விலை மலிவு என்பதோடு அதன் சுவை. ஆம், பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் கூட கிடைக்காத டேஸ்ட் சாலையோராக் கடைகளில் கிடைக்கும். அதற்காகவே நிறைய பேர் சாலையோரக் கடையில் உணவுகளை அதிகம் விரும்புகின்றனர்.

இன்று சாலையோரக் கடைகளில் சாப்பிடுவது ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது எனலாம். அதிலும் பானிபூரியை பற்றி சொல்லவே வேண்டாம்.

விலை மலிவு, டேஸ்ட் எல்லாம் ஓகே தான். சுகாதாரம் ? பானிபூரியை தயார் செய்வதில் வட மாநிலத்தவர்கள் செய்யும் அட்டூழியங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இனிமேல் பானிபூரியை சாப்பிடும் எண்ணமே இருக்கக்கூடாது என்ற முடிவை தருகிறது.

இந்நிலையில், இதுவரை நடந்த கொடுமைகளை காட்டிலும், தற்போது அசாம் மாநிலம் குவாத்தியில் நடந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இந்தியாவில் பானிபூரிக்கு நிரந்தர தடை விதிக்கும்படியாக உள்ளது.

ALSO READ  மக்கள் நீதிபதி என்.கிருபாகரன் நாளை ஓய்வு பெறுகிறார்

இனி பானிபூரி சாப்பிடும் போதெல்லாம் உன் நியாபகம் தாண்டா வரும் என வடிவேலுவின் நகைச்சுவை காட்சியில் வரும் சிங்கமுத்து போல நம்மை மாற்றியுள்ளது இந்த வீடியோ காட்சி.

அசாம் மாநிலம் குவாத்தியில் சாலையோரம் பானிபூரி கடை நடத்தி வரும் நபர் மக்கில் சிறுநீரை பிடித்து அதை பூரிக்குள் வைக்கும் ரசம் உள்ள வாளியில் ஊற்றுகிறார். மேலும், அதனை நன்கு கலக்குகிறார்.

ALSO READ  ஒருவழியாக எண்ணெய் கிணற்றில் எரிந்த தீ கட்டுக்குள் வந்தது…..

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து அந்த நபரை குவாத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

அதேசமயம், இங்கு வெட்டவெளிச்சமாக நடந்ததால் நமக்கு தெரிந்தது அவன் சிக்கிக்கொண்டான் ஆனால் பல இடங்களில் திரைமறைவில் நடைபெறுகிறது என்பதே நிதர்சன உண்மை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மும்பையில் ஒரு நிர்பயா ..பாலியல் வன்கொடுமை.. பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

News Editor

1200 கோடி செலவில் 215மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட ஹனுமான் சிலை :

naveen santhakumar

சாலைகளில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்- மக்கள் அதிர்ச்சி… 

naveen santhakumar