லைஃப் ஸ்டைல்

மன உணர்வை வெளிப்படுத்தும் எமோஜிக்கள்!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய நவீன காலகட்டத்தில்    பெரும்பாலும் சமூக வலைதளங்கள் அதிக அளவில்  மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சமூக வலைதளங்களில் பலராலும் விரும்பி பயன்படுத்தப் படக்கூடிய ஒன்று தான் எமோஜிக்கள்.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து இடங்களிலும் எமோஜிக்கள் தான் அதிகம்  பயன்படுத்தப்படுகிறது.

வார்த்தைகளை  பயன்படுத்தி உரையாடுபவர்  வெகு சிலர் மட்டுமே.

தங்களது சிரிப்பு,  கோபம் ,  அழுகை, கவலை, கிண்டல் ,கேலி , நன்றி என அனைத்து மனநிலைகளையும் வார்த்தை இன்றி பகிர்வதற்கு  மிகச்சிறந்த எளிய  முறையாக எமோஜி உள்ளது.

ALSO READ  முகத்தில் எண்ணெய் வழிகிறதா…???வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே தீர்வு காணலாம்…!

இந்த எமோஜிக்கள் மூலமாக நாம் சொல்ல விரும்புவதை   மிக  எளிதாக சொல்லமுடியும்.

நாம் ஒருவருக்கு இதனை அனுப்பும் பொழுது அவர்களால் எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும்.

பலரும் தற்பொழுது எமோஜி மூலமாக மட்டுமே பேசிக் கொள்கின்றனர்.

சாப்பிட்டீர்களா என்று கேட்பதற்கும் எமோஜி தான். ஆம், இல்லை என்பதற்கும் எமோஜி தான்.

கேள்விகளுக்கும் சரி, பதில்களுக்கும்  சரி எமோஜி தான் பயன்படுகிறது.

இந்த எமோஜிக்கு மொழி ஒரு தடையேயில்லை. எல்லோருக்கும் ஒன்றுதான் .

எல்லா மொழியினரும் பயன்படுத்தும்  வகையில் எமோஜிக்கள்  உள்ளன.

ALSO READ  இன்று உலக ஈமோஜி தினம்; வேடிக்கையான சில விலங்குகளின் புகைப்படங்கள் இதோ!!!…. 

மிகவும்  எளிதாக  மக்களால் விரும்பி பயன்படுத்த கூடியதாக  உள்ள எமோஜியை உருவாக்கியவர்  ஷிகேடிகா  குரிடா.

இவர் 1998 ல்  ஜப்பானில்  என்டிடி  என்ற நிறுவனத்தில் பணியாற்றிய  குரிடா   பல விஷயங்களை எளிதாக சொல்ல  படங்களை பயன்படுத்த  எண்ணினார்.
மக்கள் அதிகம் அன்றாடம்  வெளிப்படுத்தும்   180 விஷயங்களை தேர்வு செய்து   அவரால் உருவாக்கப்பட்டதே  இந்த எமோஜிக்கள். 
இவையே பின்னாட்களில்  வெகுவாக வளர்ச்சி அடைந்து   ஒவ்வொரு மொபைலிலும்   அதன் தயாரிப்பு நிறுவனங்களால்  உருவாக்கப்பட்டு மக்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.

எஸ்.ராஜலெஷ்மி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வோடஃபோனின் ரூ.500 கீழான பீரிபெய்டு திட்டங்கள்.

naveen santhakumar

நீங்கள் பெண்ணுக்கு நண்பனா? அல்லது காதலனா?

Admin

Fertility app-கள் குழந்தை பிறப்புக்கு உதவுகிறதா ?

Admin