இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க கவுரவ தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்கள் இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்களுள் மிக முக்கியமானவர். இவர் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்காக தனது முழு பங்களிப்பையும் அளித்து கொண்டிருப்பவர்.

ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்த நாளை (அக்டோபர் 31) தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதே போன்று இந்த வருடமும் செந்தில் தொண்டமான் அவர்களின் பிறந்தநாளை திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர் கேக் வெட்டியும், ஆள் உயர மாலை அணிவித்தும் மிக உற்சாகமாக கொண்டாடினார்கள்.

பின்னர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலசங்க அமைப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினர். அதன்பிறகு அமைப்பாளர்கள் அனைவரும் செந்தில் தொண்டமான் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க தலைவர் திரு.ஒண்டிராஜ், இளைஞரணித் தலைவர் திரு.ராஜேஷ், தேசிய அமைப்பாளர் திரு.ராஜா, இணைச்செயலாளர் திரு.சுந்தர் மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க அமைப்பாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.