அரசியல்

முன்னிலை நிலவரம்; ஆவடியில்  அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜனுக்கு பெரும் பின்னடைவு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 102 சட்டமன்ற தொகுதிகளிலும்  ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 131 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

ALSO READ  இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் !

இந்நிலையில் ஆவடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி திமுக சார்பில் போட்டியிடும் சா.மு.நாசர் 30,747 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் 18,720 வாக்குகள் பெற்று கடும் பின்னடைவில் உள்ளார்.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ரஜினி, கமல், விஜய்” போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது : சீமான் பரபரப்பு பேட்டி  

News Editor

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு..!!

Admin

காங். மூத்த தலைவர் சசி தரூருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

Admin