அரசியல்

ஸ்டாலின் 7 உறுதி மொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார்- திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற்ற தி.மு.க.வின் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ஸ்டாலின் 7 உறுதி மொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டார். அதில்….

  • அனைவருக்கும் சுத்தமான குடிநீர், அனைவருக்கும் கல்வி.தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்த்தப்படும்.
  • அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • வேலையில்லாத் திண்டாட்டம் சரி பாதியாக குறைக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் ஒருவர் கூட இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.
  • தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பு 35 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
  • ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; வேலையில்லாத் திண்டாட்டம் சரி பாதியாக குறைக்கப்படும்.
  • வறுமைக்கோட்டுக்கு கீழ் ஒருவர் கூட இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.
  • தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதார மதிப்பு 35 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
ALSO READ  கலைஞரின் நிழலாக இருந்த சண்முகநாதன் காலமானார்!

இந்த உறுதிமொழி திட்டத்தை வெளியிட்ட மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகைகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு பின்னர் நடந்த தி.மு.க.வின் முதல் மாநில பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

News Editor

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் !

News Editor

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவு !

News Editor