தமிழகம்

சிறார் ஆபாச படம்- 3 இளைஞர்கள் கைது!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்வது அதை மற்றவர்களுக்கு பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபடுவோரை தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். என்.சி.ஆர்.பி.யில் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் இளைஞர் ஹரீஷை காவல்துறையினர் கைது செய்தனர். 

ALSO READ  ஒரே நேரத்தில் இரண்டு வேலை-ஒன்னு போலீஸ் இன்னொன்னு திருடன்:

two youngsters watching video arrested police

இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட புகாரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஃபி இஸ்லாம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NORTH INDIAN YOUNGSTER ARRESTED IN KARUR

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் நியாஸ் அலி என்பவர்  ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து வருவதாக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தேசிய மையத்திற்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து  தகவல் தொடர்பு குற்றப்பிரிவு மற்றும் போக்சோ சட்டப் பிரிவின்படி நியாஸ் அலியை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

News Editor

இஸ்லாமியர்களை வெளியேற்றும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்பேன்-ரஜினிகாந்த்

Admin

ஜனவரி 21ம் தேதி வரை பொங்கல் பரிசு பெறலாம் – தமிழக அரசு

Admin