தமிழகம்

தற்காலிக பணியாளர்கள் நியமனம்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 500 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பெறுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அதிகாலை முதலே மருத்துவக்கல்லூரி வளாகத்தில் திரண்டுள்ளனர். 

ALSO READ  தமிழகத்தில் புதிய புயலுக்கு வாய்ப்பு!

ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதோடு, சமூக இடைவெளி பின்பற்றாமல் விண்ணப்பங்களை வாங்குவதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். விண்ணப்பம் விநியோகிக்கும் கட்டடத்தில் துவங்கி மருத்துவ கல்லூரி வாசலுக்கு வெளியே வரை நீண்ட வரிசையில் இளைஞர்களும் இளம் பெண்களும் நிற்கின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் அதிக அளவிலானோர் திரண்டிருப்பது  கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி லீவு எடுக்க கஷ்டமில்லை… காவலர்களுக்கு விடுப்பு செயலி அறிமுகம்!

naveen santhakumar

காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு!

Shanthi

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி- “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றம்!

News Editor