தமிழகம்

நினைவு நூலகமாக மாறும் கி.ராவின் இல்லம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு  புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நள்ளிரவு காலமானார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் கி.ரா. மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் லாஸ்பேட்டையில் உள்ள கி.ரா.வின் இல்லம் நினைவு நூலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், நாட்டுப்புற இலக்கியத்தை முதன்மைப்படுத்தியதில் கி.ராவுக்கு தனி இடம் உண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,
தமிழ் கதை இலக்கியத்தில் புதிய திசைவழியை உருவாக்கி கொடுத்த கரிசல் இலக்கியத்தின் முன்னோடி .கி.ரா. என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.


Share
ALSO READ  இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதல் வசதி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம்!

News Editor

கடன் தொல்லையால் வங்கி அதிகாரி செய்த விபரீதம்… கதவை திறந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

naveen santhakumar

முதன் முறையாக விமானத்தில் அரசு பள்ளி மாணவர்கள்… சூரரைப்போற்று பாடல் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி..!!!

naveen santhakumar