தமிழகம்

கொரோனா நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள்  மட்டுமே மருத்துவமனையில் அனுமதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கிண்டியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு நாளைக்கு 20,000 கொரோனா மாதிரிகள் எடுக்கப்படுகிறது மேலும் 25000 ம் ஆக  அதிகப்படுத்துவதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 12 கொரோனா ஸ்கிரீனிங் சென்டர்கள்  அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீனிங் செண்டர்கள் மூலம் அதிகப்படியான மக்கள் மருத்துவமனையை நாடுவதை தவிர்க்க முடியும் .அதிகமாக நோய் தொற்று தாக்கிய நபரை மருத்துவர்கள் கவனிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதன் மூலம் கட்டாய சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவம் அளிக்க இயலாது , ஆகவே ஸ்கிரீனிங் செண்டர்கள் நமக்கு பேருதவியாக இருக்கும் எனவும் கூறினார்.

ஸ்கிரீனிங் சென்டர்கள் 50 சதவீத நோய் தொற்று உள்ளவர்களை குணப்படுத்தும் என நம்பப்படுவதாக கூறினார்.நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

ALSO READ  மீண்டும் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத மம்தா !

 1. நோய் தாக்கம் அதிகம் இல்லாதவர்கள் அறிகுறி குறைவாக உள்ளவர்கள். இவர்கள் ஸ்கிரீனிங் சென்டர்களை நடலாம் அவர்களுக்கு  தேவையான ஆலோசனை அவர்களின் உணவு கட்டுப்பாடு மற்றும் அவர்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறது. இவர்கள் வீட்டு தனிமையில் கண்காணிக்க படுவார்கள் .

2. நோயின் தாக்கம் அதிகமாக உள்ளவர்கள். இவர்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினார். இவர்களுக்கு இன்றியமையாத மருத்துவத் தேவை உள்ளது.

ALSO READ  பூமிக்கடியில் புதைந்த வரலாறு… 6ம் கட்ட அகழாய்வு பணிகள் இன்று தொடக்கம்

மேலும் இன்றைய சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 3700 லிருந்து 4500 வரை நோய்தொற்று உறுதி செய்யப்படுகிறது எனவும்,  1700 பேர்  வரை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்றவர்கள் வீட்டுக்கு அனுப்பி இந்த ஸ்கிரீனிங் சென்டர்கள் மூலம் கண்காணிக்க படுவார்கள்.

 நோய் பரவல் மற்ற மாநிலங்களில் இருப்பது போலவே நமது மாநிலத்திலும் இருக்கிறது. உலக நாடுகள் அனைத்திலும் நோய் தொற்று அதிகம் பரவும் எனவும் மே மாத இறுதியில்தான் நோய் தொற்று குறைய வாய்ப்பிருக்கிறது என  வல்லுநர்கள் கூறுகின்றனர் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீட்டிற்கே காய்கறிகளை கொண்டு வரும் தமிழக அரசு.. ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி????

naveen santhakumar

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000- விரைவில் அறிவிப்பு..

naveen santhakumar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ‘ஜாபி’ ரோபோட்!!!தமிழக நிறுவனம் தயாரிப்பு

naveen santhakumar