தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதில் பொது மற்றும் தனியார் சொத்துகள் மீது சேதம் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்குகள் தவிர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகள் தவிர ஏனைய அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  வி.சி.கவின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு ! 

மேலும் காவல்துறை கைது செய்யப்பட்ட 94 பேர்களில் காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு ஆணைய பரிந்துரை அடிப்படையில் தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்:

naveen santhakumar

மதுரையில் பைக்குகளை திருடிய பாதிரியார் கைது…

naveen santhakumar

கடைகள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை…..

naveen santhakumar