தொழில்நுட்பம்

இந்த ஆண்டில் களமிறங்கு டாப் 5 எலக்ட்ரிக் கார்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதிய 2020ஆம் வருடத்தில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளன.எலக்ட்ரிக் கார்கள் கடந்த ஆண்டில் இருந்தே அறிமுகமாகி வந்தாலும் இந்த வருடத்தில் கூடுதலாக எலக்ட்ரிக் கார்கள் களமிறங்கவுள்ளன. அந்தவகையில் இந்த ஆண்டு அறிமுகமாக அதிக வாய்ப்புள்ள 5 கார்களை தற்போது பார்க்கலாம்

Mahindra e-KUV 100

மஹிந்திரா நிறுவனம் 2020ல் e-KUV 100 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த ஆண்டில் கூறியிருந்தது. இதனால் இந்த காரின் பொது சாலை சோதனை ஓட்டங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றது.

இத்தகைய சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்ட e-KUV 100 மாடலில் 15.9 kWh லித்தியம்-இரும்பு பேட்டரியை மஹிந்திரா நிறுவனம் பொருத்தியிருந்தது. இந்த பேட்டரி அதிகப்பட்சமாக சிங்கிள் சார்ஜில் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

Tata Nexon Ev

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது Nexon Ev மாடலை ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Nexon மட்டுமின்றி மேலும் சில மாடல்களையும் எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றி வரும் டாடா நிறுவனம் தனது அனைத்து எலக்ட்ரிக் கார்களிலும் அகற்ற முடியாத காந்தக ஏசி மின்னோட்ட மோட்டாரை பொருத்தியுள்ளது.

ALSO READ  கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி 

இந்த எலக்ட்ரிக் கார் சிங்கிள் சார்ஜில் 300 கிமீ தூரம் இயங்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள Nexon Ev காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 80 சதவீதத்தை வெறும் ஒரு மணிநேரத்தில் அடைந்துவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

MG ZS EV

இந்திய சந்தையில் MG மோட்டார் நிறுவனத்தில் களமிறங்கும் இரண்டாவது மாடலாக MG ZS EV கார் இந்த ஜனவரி மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை கடந்த வாரத்தில் துவங்கியிருந்த நிலையில் இந்த காரை இந்தியாவில் குறிப்பிட்ட 5 நகரங்களில் இருந்து மட்டும் தான் முதலில் விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  ஜியோ தான் டாப்… மத்ததெல்லாம் வேஸ்ட்…எதுல தெரியுமா?

Audi e-tron

அமெரிக்காவில் 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்த e-tron எலக்ட்ரிக் மாடலை இந்தியாவில் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராக அறிமுகமாவது மட்டுமில்லாமல் SUV ரக காராகவும் இந்தியாவில் இ-ட்ரான் களமிறங்கவுள்ளது.

porsche taycan

porsche நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் காராக taycan மாடலை கடந்த ஆண்டில் உலக சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அதிக வோல்டேஜ் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரியால் சிங்கிள் சார்ஜில் டைக்கான் இவி கார் சுமார் 500 கிமீ வரையில் இயக்கும் திறனை பெற்றுள்ளது. இந்த எலக்ட்ரிக் மாடலின் அறிமுகம் இந்த ஆண்டில் மே- ஜூலை மாதங்களுக்கு இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அருகில் யாருக்கேனும் கொரோனா இருக்கா என ட்ராக் செய்யும் செயலி….

naveen santhakumar

10 விநாடி வீடியோ அனுப்புங்க : ஜியோவின் பரிசை வெல்லுங்க

Admin

தண்ணீர் இல்லாத கழிவறையை அறிமுகப்படுத்திய பில்கேட்ஸ்

Admin