உலகம்

கொரோனாவாஅதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…. கொண்டாட்டத்தில் களைகட்டும் ஐரோப்பிய நாடு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மின்ஸ்க்:-

கொரோனா வைரஸ் உலகின் பல வளர்ந்த நாடுகளை  படாதபாடுபடுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஐரோப்பா திகழ்கிறது.

ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை கடும் பாதிப்பில் உள்ளது. ஆனால் ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு எந்தவித கவலையுமின்றி உற்சாகமாக உள்ளது. அந்த நாடு பெலாரஸ் தான்.

பெலாரஸ் ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ரம்மியமான தேசம். இங்கு கொரோனா குறித்து எந்தவித அச்சமும் நிலவவில்லை. இந்த நாடு இதுவரை எந்தவிதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.

பெலாரஸ் நாட்டில் மக்கள் பெரும்பாலும் முகக் கவசங்கள் அணிவதில்லை, உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பொதுப்போக்குவரத்து என எதுவும் முடங்கவில்லை.

ALSO READ  உலகம் முழுவதும் யூடியூப் சேவைகள் திடீர் முடக்கம் - பயனாளர்கள் பாதிப்பு

நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகஷன்கோ (Alexander Lukashenko) ஒரு படி மேலே சென்று சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கி போட்டியில் தானே கலந்துகொண்டு விளையாடவும் செய்தார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பேசிய பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர்:-

உலக நாடுகளின் கொரோனா குறித்த அச்சமும் ஒரு மனநோய். எங்கள் பெலாரஸ் மக்கள் கொரோனா பநவல் குறித்து எந்தவித கவலையும் கொள்ளவில்லை. எங்கள் கிராமங்களின் வயல்வெளிகளிலும், ட்ராக்டர்களும் எங்களை குணப்படுத்தும். மேற்கு ஐரோப்பிய நாடுகளை போல நாங்கள் கொரோனா குறித்த அச்சதாதில் இல்லை. தற்பொழுது மொத்த ஐரோப்பாவிலும் விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரே நாடு நாங்கள் தான்.

ALSO READ  குவாரண்டைன் முறையை அறிமுகப்படுத்தியது யார்..??? எப்போது..??

விளையாட்டு தான் நோய்க்கு எதிரான சிறந்த மருந்து. மேலும் ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் தான் பாதிக்கப்படும் என்று கூறினார்.

அலெக்ஸாண்டர் லுகஷன்கோ பெலாரஸ் நாட்டின் அதிபராக கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று Super Flower Moon-ஐ கண்டுகளிக்க வாய்ப்பு….

naveen santhakumar

உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு அழைக்கப்பட்ட தினம் இன்று…..

naveen santhakumar

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முதன்முதலாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள வீடியோ…

naveen santhakumar