உலகம்

அசத்தல் அறிவிப்பு…..தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.தடுப்பூசி செலுத்துவதால் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Covid vaccine for all above 18: Tamil Nadu plans to vaccinate minimum 60%  of population - Coronavirus Outbreak News

இதற்கிடையே, அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா ஆகிய மாகாணங்களில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. டெல்டா வகை வைரஸ் பரவல் மீண்டும் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.இதையடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்களை ஊக்கப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ  இந்த மாதிரி எந்த மாமியாரும் மருமகனுக்கு பரிசு கொடுத்திருக்க மாட்டாங்க…..அப்புடி என்ன பரிசு????
Second Phase clinical trials of Oxford COVID-19 vaccine begin in Chennai &  Pune | DD News

இந்நிலையில், நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அந்நகர மேயர் டெ பிளாசியோ அறிவித்துள்ளார். ஜூலை 30 முதல் செப்டம்பர் 2-வது வாரத்திற்குள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நியூயார்க் மக்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.

New COVID-19 vaccine warnings don't mean it's unsafe – they mean the system  to report side effects is working

மேலும், செப்டம்பருக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.நியூயார்க்கில் இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும், 71 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மலையக தமிழர்களின் தலைவன் ஆறுமுகன் தொண்டமான்.. சரித்திரமும், சாதனையும்..

naveen santhakumar

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடரும் மோதல்; செத்து மடியும் பொதுமக்கள் ! 

News Editor

இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த John Cena…

naveen santhakumar