உலகம்

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ருமேனியா பிரதமர் லுடோவிக் ஒர்பான் கொரோனா வைரஸ் சந்தேகம் காரணமாக தன்னை தானே தனிமைபடுத்தி உள்ளார். 

ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் லுடோவிக் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்பி ஒருவருக்கு கொரோரா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த எம்பி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி தன்னைத்தானே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி கொண்டுள்ளார் பிரதமர் ஒர்பான்.

ALSO READ  பெண் மருத்துவருக்கு அமெரிக்க மக்கள் அளித்த கொளரவம்.. நம் மக்கள் கற்று கொள்வது எப்போது..???

இதுகுறித்து கூறிய பிரதமர் ஒர்பான்:- 

நான் அமைச்சர்கள், எம்பிக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்பி ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் என்னை நானே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி கொண்டுள்ளேன். எனது பிரதமர் பணியை வில்லா லேக் 1-ல் இருந்து நான் தொடரப் போகிறேன் என்றார். 

ALSO READ  சமூக விலகலை கடைபிடிக்க பிரத்தியேக ஷூ ரெடி…

இதனிடையே லுடோவிக் ஒர்பான் ருமேனியாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ருமேனியாவில் இதுவரை இரண்டாயிரம் பேர் மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனினும் இதுவரை 70 பேருக்கு தான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் வரை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடை மிளகாய்குள் தவளை: அதிர்ச்சியில் தம்பதி

Admin

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானிக்கு கொரோனா… 

naveen santhakumar

அமெரிக்க அதிபர் டிரம்ப் சிகிச்சை பெறும் ராணுவ மருத்துவமனை அருகே கிடந்த மர்ம பையால் பரபரப்பு…

naveen santhakumar