உலகம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்:-

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


மாஸ்கோ:-

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரயாஸான் (Ryazan) அருகே என்ற யலட்மா (Yelatma) கிராமத்தில் நபர் ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே சத்தமாக பேசிய 5 நபரை சுட்டுக் கொன்றுள்ளார்.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

இந்த நிலையில் யலட்மா கிராமத்தில் உள்ள 32 வயதான நபர் ஒருவரின் வீட்டிற்கு வெளியே இரவு 10 மணி அளவில் ஐந்து பேர் நின்று சத்தமாகப் பேசி உள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அவரது வீட்டு பால்கனி வெளியே இருந்து சத்தமாக பேசி அவர்களை கலைந்து போகும்படி எச்சரித்துள்ளார் இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் வலுத்துள்ளது இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வீட்டிற்கு உள்ளே சென்று வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கி எடுத்து வந்து கீழே நின்ற 5 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பகுதி.

இந்த சம்பவத்தில் நான்கு ஆண்கள் ஒரு பெண் என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து அவரது வீட்டில் இருந்த ஆயுதங்களை கைப்பற்றினார்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ALSO READ  குண்டு வைத்து சிறையை தகர்த்த பயங்கரவாதிகள் - கைதிகள் தப்பியோட்டம்..!

இதனிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு ரயாஸான் பகுதி ஆளுநர் ஐகோர் க்ரெகோவ் (Igor Grekov) சென்று பார்வையிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமேசானில் பழங்குடிகளை நெருங்கும் கொரோனா.மருத்துவருக்கு நேர்ந்த கதி..

naveen santhakumar

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..

Shanthi

மேலாடை காரணமாக விமானத்தில் ஏற பெண்ணுக்கு தடை

Admin