உலகம்

வென்டிலேட்டரை மறுத்து உயிர் விட்ட 90 வயது பாட்டி நெகிழ வைக்கும் காரணம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெல்ஜியத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர்  தற்பொழுது தேவதையாக கொண்டாடப்பட்டு வருகிறார். 

ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த 90 வயதான பெண்மணி தனக்கு எந்தவிதமான மருத்துவமோ உதவியோ சுவாசக் கருவிகளோ வேண்டாம் என்று மறுத்து, இளம் நோயாளிகளுக்கு இந்த சுவாச கருவிகளை மூலம் சிகிச்சை அளித்து உதவுங்கள் என்று கூறி இறந்துள்ளார்.

பெல்ஜியத்தின் லுப்பிக் (Lubbeek) நகரை சேர்ந்தவர் சுஸான் ஹோய்லர்ட்ஸ் (Susanne Hoylaerts) 90 வயதான பெண்மணிக்கு கோளாறு காரணமாக இருந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் இவரது சுவாசம் குறைய ஆரம்பித்தது பசி உணர்வும் அற்று போனது. 

அடுத்து இவரது மகள் ஜூடித் (Judith) அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் இவரை பரிசோதித்த கொரோனா உறுதி ஆனது.

இதையடுத்து இவருக்கு சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு அந்தப் பெண்மணி மறுப்பு தெரிவித்து, இளம் நோயாளிகளுக்கு இந்த கருவிகள் மூலம் சிகிச்சை அளித்து உதவுமாறு கூறினார்.

ALSO READ  கொரோனா ஊரடங்கால் பட்டினி... வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்...

கடைசியாக அவர் கூறிய வார்த்தைகள் ‘நான் மிக அழகான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன்,  எனக்கு இது தேவைப்படபோவதில்லை’ (save it for the youngest, I’ve already had a beautiful life) என்று கூறியுள்ளார்.

இவருக்கு கொரோனா உறுதியானதை தொபர்ந்து, இவர் தனிமைப்படுத்தப்பட்டார். இவரை காண இவரது மகள் அனுமதிக்கப்படவில்லை. கடைசியாக இவரது மகளிடம் இவர் சொன்ன செய்தியில் ‘நான் இறந்தால், நீ அழ தேவையில்லை உன்னால் என்ன செய்ய முடியுமோ எல்லாவற்றையும் நீ செய்து விட்டாய்’ என்று கூறியுள்ளார்

ALSO READ  தொடரும் கொடூரம்..6 வார குழந்தையை பலி வாங்கிய கொரோனா வைரஸ்..

உலகம் முழுவதும் மிகக் கொடூரமாக கொரழனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தான் வாழ்ந்து விட்டேன், தனக்கு பின்னால் உள்ளவர்கள் வாழவேண்டும் என்று விட்டுக்கொடுத்து மரணத்தை தழுவிய இந்த பெண்மணியின் உண்மையில் ஒரு தேவதை தான்.  சென்று வாருங்கள் தேவதையே !!!

இவரது கடைசி வார்த்தைகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா ஊரடங்கால் பட்டினி… வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்…

naveen santhakumar

ஊரடங்கு: ஓட்டலில் உல்லாசம் அனுபவித்த ஜோடிக்கு 40 பிரம்படி….

naveen santhakumar

குவாரண்டைன் முறையை அறிமுகப்படுத்தியது யார்..??? எப்போது..??

naveen santhakumar