உலகம்

சீரம் நிறுவன தடுப்பூசியை திரும்ப பெற்று கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா வலிவுறுத்தல்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. அதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தடுப்பூசி ஒன்றைத் தயாரித்தது. இந்தியாவில், அந்த தடுப்பூசியை ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில், சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்தது.

இதன்பிறகு சீரம் நிறுவனத்தின் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை தென் ஆப்பிரிக்கா வாங்கியதோடு, அத்தடுப்பூசிகளையும் பரிசோதித்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு, தங்கள் நாட்டில் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த புதியவகை

ALSO READ  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த முதியவர்
கொரோனாவிற்கு எதிராக, சீரம் தடுப்பூசிகள் குறைந்த அளவு பாதுகாப்பே வழங்குவதாகக் கூறி, அத்தடுப்பூசிகளை செலுத்துவதை நிறுத்தி வைத்தது.

இந்தநிலையில் சீரம் நிறுவனத்திடம், தாங்கள் வாங்கிய தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது.ஆனால் சீரம் நிறுவனம் இது தொடர்பாக ஏந்திவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரண்டு கற்கள் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரரான தொழிலாளி… 

naveen santhakumar

கடத்தல்காரர்களிடம் இருந்து ஹீரோவாக மாறி கோடீஸ்வர தந்தையை மீட்க தனயன்… 

naveen santhakumar

பெண் செய்தியாளர் பரிதாபமாக சுட்டுக்கொலை:

naveen santhakumar