உலகம்

வெறும் தண்ணீரே போதும் கொரோனா வைரஸை கொல்ல- ரஷ்ய ஆய்வாளர்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்கோ:-

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை 72 மணி நேரத்தில் கொள்ளும் ஆற்றல் தண்ணீருக்கு உண்டு என்று ரஷ்ய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து உலக நாடுகளும் கொரோனா தொற்றில் இருந்து காக்கும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், துருக்கி தலைநகர் அங்காராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனடோலு ஏஜென்ஸி வெளியிட்டிருக்கும் செய்தியில், கொதிக்கும் நீரின் வெப்பநிலையில், கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தேசிய வைராலஜி மற்றும் பையோ டெக்னாலஜி வெக்டார் ஆராய்ச்சி மையத்தின் (Research Center of Virology and Biotechnology VECTOR) விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில், கொதிக்கும் நீரின் வெப்பநிலையில் கொரோனா வைரஸ் உடனடியாக, முற்றிலும் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நான் அதிபராக இருக்கும் வரை தன்பாலின திருமணங்களுக்கு அனுமதி கிடையாது- புடின்.

சாதாரண அறை வெப்பநிலையில் 90% கொரோனா வைரஸ் 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும், 99.9 % கொரோனா தொற்று 72 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரிலும் ஒரு சில சூழ்நிலைகளில் கொரோனா தொற்றானது வாழும் என்றும், ஆனால் கடல் நீரிலோ, சுத்தமான நீரிலோ அவை பல்கிப் பெருகுவதில்லை என்று ரஷ்யாவின் மனித நல்வாழ்வுக்கான கூட்டாட்சி சேவை மைய (Russian Federal Service for Human Wellbeing) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதே சமயம், பாத்திரங்கள், கண்ணாடிகள், பிளாஸ்டிக், செராமின் தளத்தில் கரோனா தொற்றானது 48 மணி நேரம் உயிர்வாழும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ  தமிழகம் வந்த ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.. இதில் என்ன ஸ்பெஷல்...?

30 சதவீத அடர் (Concentrate) எத்தில் மற்றும் ஐசோ ஃப்ரோபைல் ஆல்கஹால் 30 வினாடிகளில் மில்லியன் கணக்கான வைரஸ்களை கொல்லும் திறன் கொண்டவை இன்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முன்னர் 60 சதவீத அடர் ஆல்கஹால் தேவை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரஷ்யாவின் காமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் (Gamaleya National Research Centre) தயாரித்த ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பு ஊசி வரும் ஆகஸ்ட் 15 வாக்கில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது நாட்டிலுள்ள மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்த ஸ்விட்சர்லாந்து…காரணம் என்ன தெரியுமா???

naveen santhakumar

பெயர் மாறும் ‛பேஸ்புக்’… புதிய பெயர் என்ன?

naveen santhakumar

கொரோனா: ஊரடங்கால் வீட்டில் முடங்கிய நபர்… தோட்டத்தில் குழி தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்….

naveen santhakumar