உலகம்

துப்பாக்கிச் சூட்டிலிருந்து பெண்ணை காத்த மார்பகங்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


டொரன்டோ:-

கனடாவில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து பெண்மணி ஒருவரை அவரது செயற்கை மார்பகங்கள் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கனடாவில் 30 வயதான பெண்மணி ஒருவர் காலையில் வாக்கிங் சென்றுள்ளார் அப்பொழுது அவரது மார்பகப் பகுதி வலி எடுத்துள்ளது. உடனே தொட்டுப் பார்த்த போது மார்பகங்களில் இருந்து ரத்தம் கசிந்து உள்ளது.

உடனடியாக அந்த பெண்மணியை மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. துப்பாக்கி குண்டு ஒன்று அவரது இடது மார்பகம் வழியாக நுழைந்து உள்ளே ஊடுருவ முடியாமல் தவ்விச் சென்று அவரது வலது மார்பில் பாய்ந்து நின்றிருந்தது. 

இதுகுறித்து இந்தப் பெண்மணிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களில் ஒருவரான மேக்இவன்யூ (McEvenue):-

ALSO READ  நன்றி கனடா: மூன்றாவது முறையாக பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ …!

இவரின் துப்பாக்கி குண்டில் இருந்து காப்பாற்றியது அவரது செயற்கை மார்பகங்கள் ஆகும் ஆம் அவரது மார்பகங்கள் சிலிக்கான் பைகள் பொருத்தப்பட்டுள்ள காரணத்தால் அது துப்பாக்கி ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளது.

இடது புறத்தில் தான் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை உள்ளன ஒருவேளை இவர் செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் இவரது உயிர் பறிபோய் இருக்கும் இவரை காப்பாற்றியது அந்த சிலிக்கான் மார்பகங்கள் தான் என்றார்.

ALSO READ  பிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன்.

இதையடுத்து அவர் மார்பகத்திலிருந்து அந்த சிலிகான் பைகளை வெளியேற்றி அவருக்கு சிகிச்சை அளித்தனர் துப்பாக்கி குண்டு தாக்குதலில் அவரது விலா எலும்பு ஒன்று சேதம் அடைந்திருந்தது அதுவும் மருத்துவர்கள் சரி செய்தனர்.

சமீபகாலமாக பல பெண்கள் தங்களது மார்பகங்களை அழகுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில் சிலிக்கான் செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி இலவசம்-பிரான்ஸ் பிரதமர்

naveen santhakumar

உலக குடும்ப பணம் அனுப்புதல் தினம்…

naveen santhakumar

வெறும் தண்ணீரே போதும் கொரோனா வைரஸை கொல்ல- ரஷ்ய ஆய்வாளர்கள்…

naveen santhakumar