உலகம்

உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லையாம்… எந்த நாடு தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இதுவரை கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஒரே ஒரு நாடு மட்டும் எங்கள் நாட்டில் ஒருவர்கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளது.

அது வேறு எந்த நாடும் அல்ல சீனாவின் அண்டை நாடான வட கொரியா தான். இதுவரை எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது. 

சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய கடந்த ஜனவரி மாதமே தனது எல்லைகளை மூடியது வடகொரியா.

இதுகுறித்து கூறிய இந்த நாட்டின் தோற்று நோய் தடுப்புத் துறை இயக்குனர் பாக் மையோங் சு (Pak Myong Su):-

நாங்கள் எங்கள் நாட்டின் நில எல்லைகள், நீர்வழி, வான்வெளி அனைத்தையும் மூடி விட்டோம். எங்கள் நாட்டுக்குள் நுழையும் அனைவரையுமே உரிய சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ALSO READ  ஆப்பிரிக்கவை தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆவேசம்....

அனைத்து பொருட்களையும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கிறோம். எனவே எங்கள் நாட்டில் ஒருவர்கூட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் இல்லை என்கிறார்.

உலக நாடுகள் அனைத்தும் குறிப்பாக பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் பழங்குடியினர் முதற்கொண்டு கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடகொரியா பாதிக்கப்படவில்லை என்று கூறுவது வியப்பாக உள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிபுணர்கள் கூறுகையில்:-

ALSO READ  வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?

மோசமான சுகாதார அமைப்பு காரணமாக நிச்சயமாக அதிக அளவில் கொரபனா வைரஸ் பரவி இருக்கும் என்கிறார்கள். ஆனால் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இதை மறைக்கிறார் என உலக சுகாதார நிபுணர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஏனெனில் வடகொரியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவில் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது என்று கூறுகிறார்கள்.

ஆனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது நாட்டில் ஏவுகணை சோதனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிபர் கன்னத்தில் அறை… கிடைத்தது 4 மாதம் சிறை…!

naveen santhakumar

மதிப்பெண்கள் முக்கியம் இல்லை – தம்மாம் IIS முதல்வர் கடிதம்

Admin

வட கொரிய அதிபர் கிம் உடல்நிலை கவலைக்கிடம்… வடகொரியாவின் ரிசார்ட் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ள கிம்மின் ரயில்…

naveen santhakumar