உலகம்

தொடர்ந்து காரில் இருமிய பெண் பயணி… பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுனர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

லண்டனைச் சேர்ந்த நல்ல ஆரோக்கியமான உடல் நலம் உள்ள உபர் ஓட்டுனர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். 

லண்டனின் தெற்குப் பகுதியான நோர்வூட் பகுதியைச் சேர்ந்தவர் அயூப் அக்பர் (33) (Ayub Akhtar). இவர் கடந்த வெள்ளியன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

அயூப் அக்பரின் பெற்றோர் பாகிஸ்தானின் செக்ஸ்வாரி (Chekswari) பகுதியை சேர்ந்தவர்கள். அக்பர் டாக்ஸி ஓட்டுனர் என்பதோடு அவர் ஒரு சமூக ஆர்வலரும் ஆவார். 

லண்டன் போக்குவரத்துதுறை மற்றும் லண்டன் மேயர் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கான வரி விதிப்பு மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு எதிராக தனியார் நிறுவன கார் ஓட்டுநர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியவர் அயூப் அக்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா… 

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வாகனத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தொடர்ந்து  இருமியுள்ளார். இதுகுறித்து தனது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளார் அக்பர்.

இதையடுத்து சில தினங்களில் அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து தெற்கு லண்டனில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் (St. George Hospital) அனுமதிக்கப்பட்டார்.  மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தனது குடும்பத்தினருக்கும் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த செய்தியில் “எனக்கு பயமாக உள்ளது, எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது.

ALSO READ  தொடர்ந்து உயரும் கொரோனா; அச்சத்தில் உலக மக்கள் !

இதுகுறித்து அக்பரின் சகோதரர் யாஸர்  அக்தர் (Yasser Akthar) கூறுகையில்:-

கடந்த சில தினங்களுக்கு முன்பாக எனது சகோதர்-ன் வாகனத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தொடர்ந்து இருமிதாக எங்களிடம் கவலையுடன் கூறினார். இதையடுத்து தன்னைத் தானே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டார் அக்பர், தொடர்ந்து மிக கடுமையான வரட்டு இருமல் அவருக்கு ஏற்பட்டது. இதனால் இரவெல்லாம் தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அக்பர் இதையடுத்து சில தினங்களில் அவருக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து. மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றார்.

எனினும், இவரது இறுதிச் சடங்கு எப்பொழுது நடைபெறும் என்று தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் சீனாவில் உருவாகியுள்ள புது பிரச்சனை….

naveen santhakumar

டிக்டாக் செயலியை மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த அனுமதி:டொனால்டு டிரம்ப்……

naveen santhakumar

ஆறு வகை கொரோனா வைரஸ்: லண்டன் கிங்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு… 

naveen santhakumar