உலகம்

இத்தாலியில் கடைக்காரர்களை மிரட்டி மக்களுக்கு உதவும் மாஃபியா கும்பல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் வாடும் ஏழை மக்களுக்கு அந்த பகுதி மாஃபியா குழுக்கள் உதவுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்கள் அன்றாட உணவுக்கே அல்லாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தாலி மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வேலை இழந்து உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் உணவு இல்லாமல், வருமானம் இல்லாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு மாஃபியா கும்பல் இலவசமாக உணவு வழங்கி, பணம் தேவைப்படுபவர்களுக்கு பணமும் வழங்கி வருகிறது. 

இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கேம்பெனியா (Campania),  சிசிலி (Sicily), பக்லியா (Puglia), கேலப்ரியா (Calabria), ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மாபியா கும்பலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது, குறிப்பாக இத்தாலியில் நேப்பிள்ஸ் (Naples) மற்றும் பலெர்மோ (Palermo) பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Naples.

இந்நிலையில் இத்தாலியில் உள்ள மாஃபியா குழுக்கள் சில அங்குள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால் அந்த மாஃபியா கும்பல்கள் அதை விலை கொடுத்து வாங்குவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. 

ALSO READ  இத்தாலி மற்றும் சீனாவை தாண்டியது அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பொருட்களை பெற்று மக்களுக்கு அளிப்பதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் மூழ்கியுள்ள இத்தாலி அரசு இந்த மாஃபியா கும்பல் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  உலக அமைதி மாநாட்டில் மம்தா பானர்ஜி பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு

இது குறித்து மாஃபியா கும்பலுக்கு எதிரான எழுத்தாளர் ராபர்ட்டோ சாவியானோ தெரிவித்து இருக்கும் செய்தியில்:-

நாட்டில் திண்டாடி கொண்டு இருக்கும் வர்த்தகத்தை தங்களது கைக்குள் கொண்டு செல்ல மாஃபியா கும்பல் முயற்சித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும். அதோடு சிதைந்து போன நாட்டின் பொருளாதாரத்தை மீட்க மற்ற ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் மாஃபியாக்கள் தங்களின் குற்ற நடவடிக்கைகளுக்கு மக்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களால் ஆபத்து… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

naveen santhakumar

“உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” – இங்கிலாந்து பிரதமர் வாக்குறுதி!

Shanthi

கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

Admin