இந்தியா

நேற்று இர்ஃபான் கான் இன்று ரிஷி கபூர்… அடுத்தடுத்த மரணங்கள்.. அதிர்ச்சியில் பாலிவுட்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இன்று உயிர் இழந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67)-க்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் நாடு திரும்பிய ரிஷி கபூருக்கு நேற்று திடீர் என்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி கபூர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு நீத்து கபூர் என்கிற மனைவியும், ரிதிமா என்கிற மகளும், ரன்பிர் கபூர் என்கிற மகனும் உள்ளனர்.

ALSO READ  மிரட்டும் அஜய் தேவ்கான்; மோஷன் போஸ்டரை வெளியிட்ட 'RRR'படக்குழு !

ரிஷிகபூர் முன்னாள் பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் மகன் ஆவார்.

ரிஷி கபூரின் மரணத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 2018ம் ஆண்டில் இருந்து புற்றுநோயுடன் போராடி வந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நேற்று உயிர் இழந்தார்.

ALSO READ  ஷாருக்கான்-அட்லீ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு !

அந்த அதிர்ச்சியில் இருந்து பாலிவுட்காரர்கள் மீழ்வதற்குள் ரிஷி கபூர் மரணம் அடைந்துள்ளார். இரண்டு நாட்களில் இரண்டு பிரபலங்களை பரிகொடுத்த கவலையில் இருக்கிறது பாலிவுட்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உங்க கிட்ட பழைய 1ரூபாய் நாணயம் இருக்கா??????..அப்டி இருந்தா நீங்கதான் லட்சாதிபதி…….

naveen santhakumar

வாட்ஸ்அப் பேஸ்புக் பயன்படுத்த கூடாது நூதன ஜாமீன் வழங்கிய நீதிபதி… 

naveen santhakumar

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை… 

naveen santhakumar