தமிழகம்

டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு… வருத்தத்தில் குடிமகன்கள்.. ஏன் தெரியுமா???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் குடிமகன்களுக்கு சத்தமில்லாமல் அதிர்ச்சி காத்திருக்கிறது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் 3 கட்ட ஊரடங்குகளை அமல்படுத்தும் அளவிற்கு அதன் தாக்கத்தை காட்டியது.

இந்தியாவில் தொடரும் பாதிப்புகள், அதிகரிக்கும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க 45 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகளை நிபந்தனையுடன் திறக்கலாம் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

ALSO READ  மதுப்பிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை… தமிழக அரசு அதிரடி!

இதனைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.20 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிசெய்ய மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இச்செய்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் தொடக்கம்…!

naveen santhakumar

கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

Admin

உலக பட்டினி தினம்; ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

News Editor