தமிழகம்

தமிழ்நாட்டிலேயே தமிழில் பேச தடை: கொதித்தெழுந்த தொழிலாளர்கள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊட்டி:-

குன்னூரில் தொழிற்சாலையில், பொது மேலாளர் தமிழில் பேச தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அரவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு, பொது மேலாளராக சஞ்சய் வக்லு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 20 அம்ச கோரிக்கைகளுடன் பொதுமேலாளரை தொழிற்சங்கத்தினர் சந்தித்தனர்.

அப்போது உயரதிகாரிகளுடன் தமிழில் பேச கூடாது என்று பொதுமேலாளர் கூறியுள்ளனர். மேலும் கோரிக்கைகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் தமிழில் பேசியதால், தமிழில் பேசினால் பதில் கூற மாட்டேன். தொழிற்சாலையிலும் தமிழில் பேசக்கூடாது எனக்கூறினார்.

மேலும் பொது மேலாளர் சஞ்சய் பேச்சுவார்த்தையை புறக்கணித்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கொட்டும் மழையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ALSO READ  ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் !

இதற்கு குறித்து கூறிய தொழிற்சங்க நிர்வாகிகள்:-

பல நிகழ்ச்சிகளில் திருக்குறள் குறித்து பிரதமர் மோடி மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், இங்கு தமிழில் பேசுவதற்கு தடை விதிக்கப்படுவதை ஏற்க முடியாது எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், பொது மேலாளர் சஞ்சய் வாக்லு மொழி பெயர்பாளரின்றி பேச்சுவார்த்தைக்கு வந்ததாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழில் பேச தடைவிதித்த மேலாளர் மன்னிப்பு கேட்டும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். உயர் பொறுப்பில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும், 14ம் தேதி நடக்கிறது.

News Editor

மாதம் ரூ.1,000 உதவித் தொகை! உடனே விண்ணப்பிக்கவும்

naveen santhakumar

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Admin