இந்தியா

வால்வுடன் கூடிய N-95 முகக்கவசம் அணிவது ஆபத்தானது – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:- 

வால்வு பொருத்தப்பட்ட N95 முகக்கவசம் பயன்படுத்துவது கொரோனா பரவலை தடுக்காது எனவும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முகக்கவசம் முக்கிய பங்காற்றுகிறது. சமீபத்திய ஆய்வில் முறையாக முகக்கவசம் அணிந்தால் கொரோனா தாக்கும் அபாயம் 65% குறைவு என கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பான எச்சரிக்கை கடிதம் ஒன்றை, மத்திய சுகாதார சேவைகளின் பொது இயக்குனர், (Director-General of Health Services (DGHS)) ராஜீவ் கார்க் (Rajiv Garg) மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

என்-95 முகக்கவசத்தின் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்துவதை காண முடிகிறது. குறிப்பாக வால்வுடன் கூட முகக்கவசங்களை நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தவிர பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர். 

ALSO READ  காற்று மாசு அதிகரிப்பதால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்த முகக்கவசம் ஒருவரிடமிருந்து கொரோனா வைரஸ் கிருமி வெளியேறுவதை தடுக்காது. இதனால் நோய் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தீங்காக முடியும். எனவே அனைவரையும் மூக்கு, வாயை முழுவதுமாக மூடும் முகக்கவசத்தை பயன்படுத்த வலியுறுத்துங்கள். பொருத்தமற்ற முறையில் என்-95 முகக்கவச பயன்படுத்தப்படுவதை தடுக்கவும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ள வழிகாட்டலில், படி பருத்தி துணியில் வீட்டிலேயே தைத்த முகக்கவசங்களை கொண்டு மூக்கு வாயை இடைவெளி இன்றி முழுமையாக மறைக்க வேண்டும். நீரில் உப்பு போட்டு, அதில் முகக்கவசத்தை 5 நிமிடம் கொதிக்க வைத்து, பின்னர் காய வைத்து பயன்படுத்தலாம். இதனை தினமும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியிருந்தது.

ALSO READ  தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட முகமது ஷமி மனைவி..!

N95 மாஸ்க்குகள் மிக காற்றிலுள்ள நுண்ணிய (0.3 Micron) துகள்களையும் வடிகட்டும் திறன் வாய்ந்தவை. N95 மாஸ்க்குகள் 95% திறன் வாய்ந்தவை. அதனால் வால்வு பொருத்தப்பட்ட N95 மாஸ்குகளில் உள்ள வால்வுகளின் வழியாக சுத்தமற்ற காற்று உள்ளே நுழைய வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவின் நோய் பரவல் மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Centres for Disease Control and Prevention), உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சுகாதார அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுச்சேரியில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு !

News Editor

ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெற்றி

News Editor

முதலவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு !

News Editor