இந்தியா

எரிந்துகொண்டிருந்த கேஸ் சிலிண்டரை புத்திசாலித்தனமாக செயல்பட்டு அணைத்த போலீஸ் கான்ஸ்டபிள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்னோ:-

உத்திரபிரதேசத்தில் சமையல் எரிவாயு உருளையில் (Gas Cylinder) பற்றிய தீயை சமயோஜிதமாக செயல்பட்டு அணைத்த போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் (Sambhal) பகுதியில் உள்ள வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் திடீரென்று எதிர்பாராத வகையில் தீப்பிடித்தது. இதுகுறித்து சம்பல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களின் கான்ஸ்டபிள் யோகேந்திர ரதி (Yogendra Rathi) என்பவர் சிலிண்டர் எரிந்துகொண்டிருந்த வீட்டுக்குள் சென்ற இவர் எரிந்து கொண்ட சிலிண்டரை சமையல் மேடை மேலிருந்து புத்திசாலித்தனமாக தனது லத்தியை பயன்படுத்தி கீழே இறக்கி வைத்தார்.

ALSO READ  விவசாயிகளை அலட்சியப்படுத்தி பேச்சு வார்த்தை தேதியை மாற்றியது மத்திய அரசு..!

பின்னர் ஒருவர் சிறிய வாலியில் தண்ணீர் கொண்டுவந்து வைக்க துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து சற்றும் பயமில்லாமல் சிலிண்டர் அருகே சென்று ஈரத்துணியை சிலிண்டரில் சுற்றி தீயை அணைத்தார். 

ஒருவேளை சமையல் எரிவாயு வெடித்து இருந்தால் யோகேந்திர ரதி என் உயிரே போயிருக்கும். ஆனால் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாத ரதி அனாயசமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தார். 

கான்ஸ்டபிள் யோகேந்திர ரதியின் இந்த வீரதீரச் செயலை பாராட்டும் விதமாக கூடுதல் எஸ்பி ராகுல் ஸ்ரீவத்சவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ALSO READ  மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்…. 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது யோகேந்திர ரதியின் இந்த செயலை கண்டு மெய்சிலிர்த்துப் போய் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

பொதுவாக சமையல் எரிவாயுவில் இதுபோன்று தீப்பற்றி எரிவதை பார்த்தால் யாராக இருந்தாலும் தெறித்து ஓடிவிடுவார்கள். ஆனால் யோகேந்திர ரதி மிகவும் பொறுமையாக, புத்திசாலித்தனமாக, நிதானத்தோடு தனது லத்தியை பயன்படுத்தி மேலே இருந்த கேஸ் சிலிண்டரை அழகாக கீழே இறக்கி வைத்து  தீயை அணைத்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா-சீனா மோதல்… 3 இந்திய வீரர்கள் வீர மரணம்- பாதுகாப்புத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை… 

naveen santhakumar

கட்சியில் சேர்ந்த 8 வது நாளே முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் அறிவிப்பு !

News Editor

லண்டனில் இருந்து இந்திய வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று..!

News Editor