உலகம்

உலகின் டாப் 5 புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டைம்ஸ் ஸ்கொயர், நியூயார்க்

நியூயார்க் நகரில் பிராட்வேயும் 7-வது அவென்யூவும் சந்திக்கும் இடம்தான் உலகின் மையம் என்கிறார்கள் அமெரிக்கர்கள். இங்கே ஒரு காலத்தில் இயங்கிய நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அலுவலகத்தின் பெயரால் இந்த இடத்துக்கு டைம்ஸ் ஸ்கொயர் என்று பெயரிட்டார்கள். 100 வருடமாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் இங்கு கூடி புத்தாண்டு கொண்டாடுவார்கள். இரவு 12 மணிக்கு வெடிக்கும் கிரிஸ்டல் எல்.ஈ.டி பந்திலிருந்து சிதறும் கோடான கோடி வெளிச்சத் துணுக்குகளில் நனைந்து புத்தாண்டை துவக்குகிறார்கள்.

லாஸ் வேகாஸ்

அமெரிக்காவின் நெவோடா பாலைவனத்தின் நடுவில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய சூதாட்ட நகரம். ஒருகாலத்தில் கெளபாய்களின் சொர்கமாக இருந்த லாஸ்வேகாஸ் இன்றைய அமெரிக்காவின் பாரிஸ். புத்தாண்டு அன்று அமெரிக்க vvipகள் குழுமுவது இங்கேதான். எம்.ஜி.எம் கிரேண்ட், தி பெலாஜியோ போன்ற இங்கிருக்கும் நட்சத்திர விடுதிகளின் முன்னாள் நமது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களெல்லாம் சாதாரண லாட்ஜுகள் தான். புத்தாண்டு இரவு அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான ஜாஸ் இசைக்குழுக்களும் அங்கே கூடும். தெருவுக்கு தெரு ஒரு சூப்பர் ஸ்டார் பாடிக்கொண்டு இருப்பார். அதிகாலை பாலைவனத்தில் சூரியன் உதிக்கும் வரை கொண்டாட்டங்கள் தொடரும்.

ரியோ டி ஜெனிரோ

ALSO READ  உள்ளங்கை அளவு பிறந்த குழந்தையின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா?

பிரேசில் தேசத்து ஊர் மக்களின் ரசனை மிகவும் வித்தியாசமானது. வெள்ளை வெளேர் உடையில் இன்று மாலை பத்துலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடற்கரையில் குழுமி புத்தாண்டுக் கொண்டாட்டத்தை துவங்குவார்கள். கூடை கூடையாக பூக்களைக் கொண்டுவந்து அலைகளின் மேல் தூவுவார்கள்.இப்போது , கன்னி மரியாவின் வழிபாடாக இது சொல்லப்பட்டாலும்,இது தொல் பழங்கதைகளில் வரும் ஆப்பிரிக்க கடல் தேவதை யெமன்ஜோ விற்கான வழிபாடு இது.

லண்டன்

ஒரு காலத்தில் உலகின் தலைநகரம் என்றாலும்,புத்தாண்டு இரவுகளில் இங்கு நடக்கும் வாணவேடிக்கை நிகரில்லாதது.ஒரு காலத்தில் தேம்ஸ்நதிக் கரையில் நின்று யார் வேண்டுமானாலும் வேடிக்கை பார்க்கலாம் என்று இருந்த இந்த வாண வேடிக்கைக்கு டிக்கெட் போட்டு விட்டார்கள்.ஒரு டிக்கெட் 10 பவுண்ட்.(800 ரூபாய்).மொத்தம் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் மட்டும் விற்கிறார்கள். இந்த டிக்கெட் விற்பனை டிசம்பர் 28ம் தேதியே துவங்கிவிடும்.இது தவிர தேம்ஸ் நதியில் தனியார் படகுகளில் பயணித்த படியே வாண வேடிக்கை பார்க்க முன்பதிவு உண்டு,அவறுக்கு கட்டணம் தனி. 31 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிக்பென் கடிகாரம் பணிரெண்டு முறை அடிக்கும் போது ஒவ்வொரு அடிக்கும் முன்கூட்டியே ஒத்திசைவு செய்யப்பட்ட வாணங்கள் லண்டன் வானதை வண்ண விளக்குகளால் ஒளியூட்டத் துவங்குகையில் தேவாலயங்களில் பிரார்த்தனைகளும்,தெரு முனைகளில் பார்ட்டிகளும் துவங்கும்.

ALSO READ  வானியல் ஆய்வாளர்கள் சூரியன் மற்றும் பூமியின் பிரதி பிம்பத்தைப் கண்டறிந்துள்ளனர்… 

பாரிஸ்

பாரிஸ் நகரத்தில் எல்லா இரவுகளுமே கொண்டாட்டங்கள் நிறைந்தவை என்பதால் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை வேறுபடுத்திக் காட்டத்தான் இந்த வாணவேடிக்கைகள் என்று என்னத் தோன்றும். எல்லோரும் கையில் ஷாம்பெய்ன் பாட்டில்களுடன் காத்திருக்க இரவு 12 அடித்ததும் ஈஃபில் டவரின் அடியிலிருந்து வாண வேடிக்கைகள் துவங்கும். அதற்கு இணையாக மக்களும் ஷாம்பெய்ன் பாட்டில்களை திறந்து சிதறடிப்பார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெள்ளை மாளிகை முற்றுகை; பதுங்குகுழிக்குள் அழைத்துச்செல்லப்பட்ட அதிபர் ட்ரம்ப்…

naveen santhakumar

அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது- பாக். அரசு அறிவிப்பு…!

naveen santhakumar

இன்று Super Flower Moon-ஐ கண்டுகளிக்க வாய்ப்பு….

naveen santhakumar