தமிழகம்

தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறி சென்று விட்டதா; சுகாதார செயலாளர் விளக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தியும் வருகிறது 

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதி மன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை என்று தெரிவித்தார்.


அரசு தலைமை வழக்கறிஞர் இந்திய அளவில் கொரோனா பாதிப்பை குறிப்பிட்டதாகவும்,   உயர்நீதிமன்றத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதியிடம் ஆலோசனை மேற்கொண்டதாக கூறினார்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 ஆயிரம் பேர்  பாதிக்கப் பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேலும்  நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.  கபசுர குடிநீருக்கும், தடுப்பூசிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. உலகளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை  என்றார்.  

ALSO READ  பிச்சைக்காரர்களை குறிவைத்து பணம் பறித்த இளைஞர்… 


கபசுர குடிநீருக்கும், தடுப்பூசிக்கும்  தொடர்பில்லை என்றும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற அவர், உலகளவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று வந்திருப்பதாகவும், தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

#TamilnaduHealthSecretary #Tamilnadu #TamilThisai #corona #Coronavirus #Covid19 #Tamilnadu #DrRadhakirshnan #corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #IndiaFightCorona #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு… மாணவர்கள் அதிர்ச்சி!

naveen santhakumar

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நில அதிர்வு; பீதியில் நெல்லை மக்கள் !

News Editor

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா…

naveen santhakumar