அரசியல்

திமுகவினர் கொண்டாட்டம்; காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது திமுக 153 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திடீரென கூடிய தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதை கொண்டாடினர்.

தேர்தல் ஆணையம் இன்று கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து இருந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தவர்கள் தடுக்கத் தவறியதாக தேனாம்பேட்டை ஆய்வாளர் முரளி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ALSO READ  அமைச்சர் ஜெயக்குமார் ஒரு PlayBoy உதயநிதி ஸ்டாலின்…

இதனைத்தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தொண்டர்களுக்கு தேர்தல் கொண்டாட்டங்களை வீட்டில் கொண்டாடுங்கள் வீதியில் அல்ல என அறிவுறுத்தினார். இதனால் அண்ணா அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் காவலர்களை கொண்டு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அண்ணா அறிவாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை காவல்துறையினர் தடுப்புகளை வைத்து யாரும் உள்ளே வந்து கொண்டாட்டங்களில் ஈடுபடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘போர் புரிய போர்ப்படை இருப்பினும் தளபதி மௌனம் காப்பது ஏனோ’ பரபரப்பை கிளப்பிய சசிகலா போஸ்டர் !

News Editor

சாதனை படைத்த உதயசூரியன் சின்னம்..!

News Editor

“நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில் !

News Editor