தமிழகம்

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 95 வயது முதியவர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2-வது அலை நாட்டையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி,உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தநோய் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் இளம் வயதினரும் அதிகம் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த 95 வயது முதியவர் கொரோனா தடையை தகர்த்து நோயிலிருந்து குணமடைந்து இளைய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர், பகுதியை சேர்ந்த  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பழனிசாமி. 95 வயதான இவருக்கு சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டது.செல்வபுரம் பகுதியில் உள்ள சினேகராம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செய்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

ALSO READ  பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் !

இதனை தொடர்ந்து மருத்துவர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர்,அவருக்கு சிகிச்சை அளித்தனர்.இளம் வயதினரே பலரும் இந்த நோயால் உயிரிழந்து வரும் நிலையில், துவண்டு போகாத முதியவர் தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை  ஏற்றுக்கொண்டு,  மருத்துவர்கள் செவிலியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். 

இதன் பலனாகவும், அவர் மன தைரியத்தின் காரணமாகவும் கொரோனா நோயுடனான போராட்டத்தில் வெற்றி பெற்று பூரண குணமடைந்தார். இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து,அவர் வெளியேறும் போது,மருத்துவர்கள்,செவிலியர்கள்,மற்றும் ஊழியர்கள் என பலரும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ..!

News Editor

கோரதாண்டவம் ஆடும் கொரோனா… சென்னையில் மட்டும் இத்தனை தெருக்களில் தொற்றா?

naveen santhakumar

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் தந்தைக்காக எழுதிய கவிதை… 

naveen santhakumar