சினிமா

ஏ.ஆர் ரஹ்மானின் “99 ஸாங்ஸ்” படத்தின் டிரைலர் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இசையின் மூலம் தமிழர்களின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உள்ளது. இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஒரு முழு படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

“99 ஸாங்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


இந்நிலையில் “99 ஸாங்ஸ்” படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இசையை வெறுக்கும் கொடுப்பதில் இருந்து இசையை நேசிக்கும் ஒரு இளைஞன் தனது இசை கனவை துரத்தும் வகையில் ட்ரைலர் அமைக்கப்ட்டுள்ளது. விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் கலந்த இப்படத்தின் டிரைலர் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

ALSO READ  மாநாடு படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கருத்து !

#ARrahman #99songs #TamilThisai #tamilmovie #Tamilcinema #cinema #cineupdate #kollywood #ARrahman #hindimovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இவங்க கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா..பிரபல நடிகையை புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா

Admin

FilmFare விருது நிகழ்ச்சியில் கலக்கலான உடையில் நடிகைகள்

News Editor

நண்பர்களுடன் ஆனந்தமாய் குளிக்கச் சென்ற நடிகருக்கு நேர்ந்த சோகம் :

naveen santhakumar