தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம் பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் ஆசிரியரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பிஸ்பிபி பள்ளி ஆசிரியரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. இப்பள்ளி மூடப்படவேண்டும் என்று உணர வைத்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை.
எனது நண்பர் அன்பில் மகேஷ் இப்பிரச்சனையில் வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேசமயம், இதனை சாதி பிரச்சனையாக மக்கள் மாற்றுவது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் தூக்கிலிடப்படவேண்டும். இப்போதாவது, பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இதை சாதி பிரச்சனையாக மாற்றாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.