சினிமா

இப்போ இதை செய்தால் மனிதமற்ற செயலாக இருக்கும்; மாநாடு படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை  சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

“மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர்  வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த மே 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததை அடுத்து பாடல் வெளியிட முடியாமல் போனது. 

ALSO READ  முதல் டெஸ்டில் நியூசிலாந்துக்கு சவால் கொடுக்க தயாராகும் இந்தியா

இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு முக்கிய அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்துகொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை.

மருத்துவமனை வாசலிலும் கரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று ‘மாநாடு’ படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். லாக்டௌன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்றவது முறையாக தனுஷுடன் இணையும் பிரபல நடிகை!

News Editor

பிரபல ஹாக்கி வீரரின் வாழ்க்கை  வரலாறு திரைப்படமாக உள்ளது 

News Editor

இந்துஜா இத்தனை அழகா.. யம்மாடி..

News Editor