சினிமா

அனல் பறக்கும் கெட்டப்பில் மிரட்டும் யாஷ்..! வெளியாகியது கே.ஜி.எஃப் 2 டீசர்..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

 
கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கே.ஜி.எப் 2  படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்படி, படத்தின் டீசரானது நடிகர் யாஷ் பிறந்தநாளான இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தது. ஆனால் நேற்று திடீரென டீசரின் ஒரு பகுதி ட்விட்டரில் கசிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு அறிவித்ததற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக டீசரை வெளியிட்டது.

ALSO READ  என்னது உ.பி-ல தங்க சுரங்கம் இல்லை..!!!!!

அதனையடுத்து விறுவிறுப்பு கலந்த இந்த டீசரில் அனல் பறக்கும் கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார் நடிகர் யாஷ். இது படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் கூட்டியுள்ளது.

#hbdyash #kgf2 #kgf2teaser #kgf2 #tamilthisai #kgfchapter2


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யூடியூப்பில் புதிய சாதனை படைத்த “வெறித்தனம்” பாடல்

Admin

கொரோனாவால் உயிரிழந்த விஜய் பட நடிகர் ! 

News Editor

நேச்சுரல் நடிகர் மோகன்லாலுக்கு 60வது பிறந்தநாள்.. 

naveen santhakumar