சினிமா

மாஸ்டர் படத்தில் மாதவன் மறுத்ததால் விஜய்சதுபதி நடித்தார்..! ரத்னா குமார் பேட்டி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். படத்தின்  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  


அதனையடுத்து கொரோனா பெருந்தொற்றினால் திரையரங்குகள் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டிய மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
அதனை தொடர்ந்து தீபாவளி அன்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். 
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யாரை நடிக்கவைப்பது என்று நீண்ட நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ALSO READ  சாய்னா நேவால் படத்தின் டிரைலர் வெளியீடு !

அதனையடுத்து நடிகர் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தேதி பிரச்சனை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. அதனையடுத்து தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதிலும் இறுதிக்கட்ட முடிவு எட்டப்படவில்லை. அதனையடுத்துதான் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார் என்று மாஸ்டர் படத்தின் திரைக்கதையில் உதவி புரிந்துள்ள ரத்னா குமார் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ஹரி நாடர்; பிரபல ஸ்டுடியோவில் நடந்த பட பூஜை !

News Editor

பழம்பெரும் நிறுவனத்தை 61 ஆயிரம் கோடிக்கு வாங்கிய அமேசான் !

naveen santhakumar

மது கிடைக்காத விரக்தியில் தூக்க மாத்திரைகளை உட்கொண்ட பிரபல நடிகையின் மகன்…..

naveen santhakumar