சினிமா

‘பிரியங்கா என்ற கானக் குயில்’ பிசாசு 2 படத்தில் பாடியுள்ளார் : மிஸ்கின் பாராட்டு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மிஸ்கின், இவர் முகமூடி, துப்பறிவாளன், பிசாசு போன்ற பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதனையடுத்து மிஸ்கின் கடைசியாக  ‘சைக்கோ’ என்ற படத்தினை உருவாக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது.


அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆகையால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை  இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. பின்பு இயக்குனர் மிஸ்கின் அந்த தகவலை உறுதி செய்திருந்தார்.


அதன்பின் மிஸ்கின்  பிசாசு 2 படத்தின் பணிகள் தொடங்கியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ராக்போர்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் பிசாசு 2 படத்தின் பாடல் நேற்று
பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரியங்கா ஒரு பாடலை பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் ’நாச்சியார்’ படத்திலும் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ’மாம்’ படத்திலும் பாடியிருக்கிறார், என்பது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து தற்போது பிசாசுக்கு 2 படத்திலும் பாடியுள்ளார்.

ALSO READ  உங்களுடன் பணிபுரிந்தது  என்னுடைய அதிர்ஷ்டம்; நடிகை தமன்னா!


இது குறித்த  தகவலை இயக்குனர் மிஸ்கின் தகனுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  “இன்று நடந்த பாடல் பதிவில் மேன்மையாக பாடிய பிரியங்காவிற்கு நன்றி. மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்த ஆடியோ இன்ஜினியர் பிஜு ஜேம்ஸுக்கு நன்றி. பிரியங்கா என்ற கான குயிலைப் பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் நன்றி” என்று மகிழ்ச்சியுடன் பிரியங்காவை பாராட்டியுள்ளார்.

https://twitter.com/DirectorMysskin/status/1338548855026147328?s=20

ALSO READ  'RRR' படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை “ஆர்யா பானர்ஜி” வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்….

News Editor

Valimai Update: வலிமை படத்தின் முதல் பாடல் இன்றிரவு வெளியீடு…!

naveen santhakumar

மீண்டும் வெளியீட்டில் தள்ளிப்போகும் காட்டேரி படம்…!

News Editor