சினிமா

உங்களுடன் பணிபுரிந்தது  என்னுடைய அதிர்ஷ்டம்; நடிகை தமன்னா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் கே.வி.ஆனந்த மாரடைப்பால் காலமானார். 54 வயதாகும் இவருக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கம்..!

அந்த வகையில் கே.வி.ஆனந்த மறைவுக்கு நடிகை தமன்னா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், புகழ்பெற்ற கே.வி.ஆனந்த் சாருடன் பணிபுரிந்து என் அதிர்ஷ்டம். எனது தமிழ் திரை படங்களில் மறக்க முடியாத திரைப்படத்தை எனக்குக் கொடுத்தார். ஐயா, நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர். அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை தமன்னா இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கணவருடன் ஹோலி கொண்டாடிய காஜல் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிம்பு கெளதம் மேனன் படத்தின் தலைப்பு வெளியீடு !

News Editor

‘கே.ஜி.எஃப் 2’ மலையாள உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்…! 

News Editor

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி:

naveen santhakumar