சினிமா

கேரளாவில் தோல்வியை தழுவியதா தர்பார்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் கேரளாவில் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா நடித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படம் உலகம் முழுவதும் வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்ற தர்பார் திரைப்படம் வசூலில் ரூபாய் 150 கோடியை கடந்ததாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்தது.

ALSO READ  ஸ்டெர்லைட் விசாரணைக்கு ஆஜராக பயந்தாரா ரஜினி…?

இந்நிலையில் தர்பார் திரைப்படம் கேரளாவில் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.மேலும் இதுவரை கேரளாவில் மொத்தம் ரூ. 7.8 கோடி தான் வசூல் செய்துள்ளதாகவும், ரூபாய் 12 கோடி அளவிற்கு வசூல் வந்தால்தான் அனைவருக்கும் லாபம் என்ற நிலையில் படத்தின் வசூல் விநியோகஸ்தர்களை கவலையடைய செய்துள்ளது.

இதனால் தற்போது படம் கேரளாவில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் எந்திரனுக்கு பிறகு கேரளாவில் ரஜினி நடித்த எந்தப் படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் கே.பி….. 

naveen santhakumar

சிகரெட், சரக்கு பாட்டில், தமிழ் ராக்கர்ஸ் … வைரலாகும் பிரேம்ஜியின் புகைப்படம்…!

naveen santhakumar

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்…!

News Editor