சினிமா

ட்விட்டரில் திடீரென ட்ரெண்டாகும் சிம்பு என்ன காரணம்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடுவதால் அவரது பெயரில் பல ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளன.

தமிழ்சினிமாவில் பன்முக திறமைகள் கொண்ட நடிகர்களில் நடிகர் சிலம்பரசனும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல திறமைகளில் தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றவர் சிம்பு.

ஆனால் ஷூட்டிங் சரியாக செல்லாததது, தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்ட் கொடுத்தது போன்ற பிரச்சனைகளால் சிலகாலம் ஒதுங்கியிருந்த சிம்பு , மீண்டும் ‘செக்க சிவந்த வானம்’ படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்து, வந்தா ராஜாவா தான் வருவேன், மஹா படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ  சிம்புவின் படத்தை வெளியிடமாட்டோம்; திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை !

இந்நிலையில் சிம்பு இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன் குடும்பத்தினருடன் கேக் வெட்டிய புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகின்றன.

இதனை முன்னிட்டு ட்விட்டரில் #HappyBirthdaySTR, #HBDSilambarasanTR, #HBDYouthIconSTR, #happybirthdaysimbu, #HBDSTR ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதன் முறையாக விமானத்தில் அரசு பள்ளி மாணவர்கள்… சூரரைப்போற்று பாடல் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி..!!!

naveen santhakumar

கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

naveen santhakumar

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி !

News Editor