இந்தியா

பணக்கார நாடாக மாறும் இந்தியா- 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்திரப்பிரதேசத்தின் நக்ஸல் நடமாட்டம் அதிகமுள்ள மாவட்டமான சோன்பத்ராவில் (Sonbhadra) 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, இரண்டு சுரங்கங்கள் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது.

இது RBI கையிருப்பை விட 5 மடங்கு அதிகம்.

இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) மற்றும் உத்திரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பாகதீ (Sonpahadi) என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக சுரங்க இலாக்கா அதிகாரி KK ராய் தெரிவித்தார்.

இதேபோல புந்தேல்கண்ட் மற்றும் விந்த்யான் மாவட்டங்களில் அதிகளவில் தங்கம், வைரம், பிளாட்டினம், கிரினைட் உள்ளிட்டவை அதிகளவில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ  பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

World Gold Council-ன் மதிப்பீட்டின் படி இந்தியாவின் தங்க இருப்பு 626 டன்கள் ஆகும்.

உலகில் அமெரிக்காவின் தங்க கையிருப்பு அளவு தான் அதிகம் கிட்டதட்ட 8,133.5 டன்கள், இதையடுத்து ஜெர்மனி- 3366 டன்கள், International Monetary Fund (IMF)- 2814 டன்கள், இத்தாலி- 2451.8, ஃப்ரான்ஸ்- 2436, ரஷ்யா- 2241.9, சீனா- 1948, ஸ்விட்சர்லாந்த்- 1040, ஜப்பான்- 765.2 டன்களுடன் உள்ளது.

ALSO READ  ஊரடங்கு உத்தரவு: குடும்ப தகறாறு... கங்கையில் 5 குழந்தைகளை வீசி கொன்ற பெண்....

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை: அதிகாரிகள் அதிர்ச்சி.. 

naveen santhakumar

ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் முடிவுகளை வெளியிட வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு…!

naveen santhakumar

ஏழைகளுக்கு 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒன்றிய அரசு ஒப்புதல்

News Editor