இந்தியா

இந்தியாவில் விமான போக்குவரத்து கட்டணம் உயர்வு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பயணிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும்பாலான வழித்தடங்களில் விமான சேவையை ரத்து செய்தனர். இதனால் விமான நிறுவனங்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை சமாளிப்பதற்காக உள்நாட்டு விமான சேவையைக் கட்டணத்தை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உயர்த்தியுள்ளது. 

அதன்படி, உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறை 13%இலிருந்து 16% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய சேவைக் கட்டணம் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மும்பையிலிருந்து சென்னைக்கு விமான கட்டணம் ரூபாய் 2 லட்சம்

News Editor

ம.பி.-பசு பாதுகாப்பு கும்பலின் மாவட்டத் தலைவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை… 

naveen santhakumar

ஜனநாயகம் வென்றுள்ளது – ராகுல் காந்தி பேச்சு!

Shanthi