இந்தியா

திடீரென கடையை மூட சொன்ன அதிகாரிகள்; புதுச்சேரியில் பரபரப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் திடீரென அதிகாரிகள் மூட சொன்னதால் வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மதுபான கடைகளை தவிர மற்ற அத்தியாவசிய கடைகள் மதியம் இரண்டு மணி வரை திறந்திருக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ALSO READ  4 வயதிற்கு உட்பட குழந்தைகள் ஹெல்மெட் அணிய வேண்டும்

இந்நிலையில் இன்று காலை நேரு வீதி, கொசக்கடை வீதி உள்ளிட்ட கடை வீதிகளுக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகளும் உடனடியாக மூட வேண்டும் என கோரியும், மேலும் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வியாபாரிகளை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து புதுச்சேரி முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. திடீர் திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி கடைகளை அதிகாரிகள் அடைக்க சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும், முன்னறிவிப்பு வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமின் – மும்பை உயர் நீதிமன்றம்

naveen santhakumar

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika

ரயில் நிலையங்களில் பொது மக்கள் எச்சில் துப்புவதை தடுக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி

News Editor