இந்தியா

நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பு; உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது. 

ALSO READ  அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்..!!

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 


இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,69,899 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 904 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு நகர்ந்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,35,27,717 ஆக உயர்ந்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ATM-ல் 5000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் மினிமம் கட்டணம் வசூல்:

naveen santhakumar

Mostbet, Azərbaycanda Ən Yaxşı Onlayn Kazinolardan Bir

Shobika

இந்தியாவின் CAGயாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்…

naveen santhakumar