இந்தியா

கொரோனா தடுப்பூசி ஒன்றின் விலை ரூ. 1000- இந்தியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்???? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கொரோனா தடுப்பூசி ஒன்றின் விலை ரூ. 1,000-  க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக சீரம் நிறுவனம் தலைமைச் செயல் அதிகாரி அடர் பூனவல்லா (Adar Poonawalla) அறிவித்துள்ளது.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா (AstraZeneca) நிறுவனத்துடன் இணைந்து கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளது. 

இந்த தடுப்பு மருந்து ஆரம்ப கட்ட சோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது இதைத் தொடர்ந்து இந்த மருந்து மனிதர்களில் மூன்றாம் கட்ட சோதனை செய்யப்படவுள்ளது.

இதனிடையே புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் (Serum Institute of India) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய அனுமதி வேண்டி இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு (Drug Controller General of India) விண்ணப்பித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பேட்டி ஒன்றில் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனாவாலா கூறுகையில்:-

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள AZD122 என்ற கொரோனா தடுப்பு மருந்து. இந்தியாவில் Covishield  என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.

ALSO READ  இ-பதிவில் குழப்பம்; புதிய மாற்றம் செய்த தமிழக அரசு !

ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவில் 5,000 பேரிடம் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மருந்து பரிசோதனையில் மனிதர்களிடத்தில் நடத்தப்படும் மூன்றாவது கட்ட பரிசோதனைதான் முக்கியமானது. இதில், சாதகமான முடிவு கிடைத்த பிறகே சந்தையில் மருந்து அறிமுகப்படுத்தப்படும். 

ஆனாலும் சிறப்பு அனுமதி பெற்று இறுதி முடிவு கிடைப்பதற்கு முன்னரே 200 மில்லியன் டாலர்கள் மதிப்பில் 300 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். தடுப்பு மருந்து கடைசி கட்டத்தில் சோதனை தோல்வியடைந்தால், வர்த்தகரீதியாக எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 50 சதவிகிதம் இந்தியாவுக்கு வழங்கப்படும். மற்றவை பிற நாடுகளுக்கு அளிக்கப்படும். தற்போது  கொழும்பு நா பரிசோதனை செய்வதற்கு 2500 ரூபாய் வரை செலவாகிறது.  தற்பொழுது குரோனா நோயாளிகளுக்கு தரப்படும் ரெம்டெசிவர் (Remdesiver) மருந்து விலை ஆயிரங்களில் உள்ளது.

ALSO READ  விவசாய போராட்டத்திற்கு காந்தி பேத்தி ஆதரவு..!

இதனால், ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 1,000 என்ற விலையில் சந்தையில் வழங்கப்படலாம். எனினும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அரசுகள் எங்களுக்கு பணம் செலுத்தும். இதனால் தடுப்பூசிகளும் மக்களுக்கு இலவசமாகவே கிடைக்கும்.

ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்கள் சோதனைக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், அங்கு நடந்த பரிசோதனையில் சாதகமான முடிவு கிடைத்திருப்பதால் இந்தியாவில் நடத்தப்படும் பரிசோதனையில் முதியவர்களும் சுகாதார பணியாளர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். மூன்றவாது கட்ட சோதனைக்கு இரு மாதங்கள் தேவைப்படும். அனேகமாக, நவம்பர் மாதத்தில் இறுதி முடிவு கிடைக்கும்.  அடுத்ததாக 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 300 முதல் 400 மில்லியன் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படும்.

கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான மும்பை, புனே நகரங்களிலிருந்து தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சீரம் இந்தியா நிறுவனம் மட்டமல்லாமல் 60 நாடுகளை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனங்களும்  இணைந்து 300 கோடி மக்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாதம் 20 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு….

naveen santhakumar

10ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த ‘snapdeal.com’ நகரின் வரலாறு தெரியுமா? …

Admin

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: யுஜிசி உத்தரவு…..

naveen santhakumar