இந்தியா

பத்மஸ்ரீ விருது பெற்ற பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’ கொரோனா வைரஸால் மரணம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமிர்தசரஸ்:-

அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’ (Hazoori Ragi) யும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நிர்மல் சிங் கல்சா கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிர்மல் சிங் கல்சா (62) ஒரு குர்பானி பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவரது உடல் நிலை நேற்று மாலை மோசமடைந்ததாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் சுஜாதா சர்மா தெரிவித்தார், நேற்று மாலை 4.30 மணிக்கு மரணமாடைந்தார்.

இவர் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். இவருக்கு தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக குருநானக் தேவ் மருத்துவமனையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ALSO READ  பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைந்தார்:

இவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய இவர் அதன் பின்னர் பல்வேறு மத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார், குறிப்பாக பிப்ரவரி 29 ஆம் தேதி பிரபல தபேலா கலைஞர் ஜாகீர்உசேன் உடன் இணைந்து பொற்கோவிலில் இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி உள்ளார்.

ALSO READ  தேசிய கீதம் அவமதிப்பு : மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார்

அதேபோல் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சம்மேளன் என்ற மத நிகழ்ச்சி இவர் நடத்தியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையே போலீசார் இவரது வீடு அமைந்துள்ள பகுதியை முற்றிலுமாக வைத்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று…..

naveen santhakumar

அலட்சியப் போக்கால் தங்க நகைகளை குப்பையில் வீசிய பெண் :

naveen santhakumar

புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ! 

News Editor