இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் பின்னணி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவழியாக 7 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ராம் சிங் என்பவன் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளி தையல் இயந்திரம் கொடுத்து மூன்றாண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டான்.

இளம் குற்றவாளி.

இந்நிலையில் இந்த குற்றவாளிகளின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.

முகேஷ் சிங் (32):-

சம்பவம் நிகழ்ந்த அந்த பேருந்தின் கிளீனராக பணியாற்றியவன். அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்ணையும், அவரது ஆண் நண்பரையும் இரும்புக் கம்பியால் தாக்கியவர்.

2015- ஆம் ஆண்டு பிபிசி செய்தியாளர் இவனை நேர்காணல் எடுத்தபோது,
இரவு நேரத்தில் அந்த பெண் தனது நண்பருடன் பேருந்தில் வந்தார். அவர் எங்களை ஈர்த்ததால் நாங்கள் அத்துமீறினோம் என்று தெரிவித்தான்.

ALSO READ  அமெரிக்காவாக மாறும் இந்தியா … திரும்பும் திசையெல்லாம் ட்ரம்ப் பெயர்கள் …

ராம் சிங்:

முகேஷின் மூத்த சகோதரர் ராம் சிங் அந்த பேருந்தின் ஓட்டுனர். இவன் தான் நிர்பயாவை கொடூரமாக தாக்கியவன். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. ஆனால் 2013- ஆம் ஆண்டு இவன் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இவனது தந்தை மங்கிலால் இவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை இவனை கொலை செய்துள்ளார்கள் என்று அப்போது கூறினார்.

அக்‌ஷய் தாக்கூர் (31):-

அக்‌ஷய் தாக்கூர் பீகார் மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவன். பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவன் . இவனுக்கு திருமணமாகி ஒரு மகன் உண்டு. இவனது மனைவி இவன் குற்றமே செய்யவில்லை என்று கடைசிவரை கூறிவந்தார்.

மேலும், கடைசி நேரத்தில் தண்டனையை தள்ளிப்போட இவனது மனைவி தான் விவாகரத்து கோரினார்.

ALSO READ  “தயவுசெய்து இதை செய்யுங்க” ... நிர்பயா குற்றவாளிகளின் கடைசி ஆசை இதுதான்

வினய் சர்மா (26):-

இவன் ஜிம் பயிற்சியாளராக, மற்ற 4 பேர் நிர்பயாவை பலாத்காரம் செய்தபோது இவன் தான் பேருந்தை ஓட்டியவன். தண்டனை பெற்ற ஐந்து பேரில், இவன் மட்டுமே பள்ளி கல்வி கற்றவன். மேலும் இவனுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும். இவன் குற்றத்தை மறுத்தோடு சம்பவம் நிகழ்ந்த போது வேறு ஒரு நிகழ்ச்சியில் இருந்ததாக கூறினான்.

பவன் குப்தா (25) :-

இவன் ஒரு பழ விற்பனையாளர், மற்ற நான்கு குற்றவாளிகளில் இளையவர், திஹார் சிறைக்குள் இருந்து பட்டம் பெற்றான் என்பது குறிப்பிடதக்கது. இவனும் சேர்ந்து தான் நிர்பயாவையும், அவரது நண்பரையும் இரும்பு கம்பியால் தாக்கினர். இவனது தந்தையோ சம்பவம் நிகழ்ந்த போது அந்த இடத்திலேயே இவன் இல்லை மதியமே வேறு எங்கோ சென்று விட்டான் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விமானத்தில் கொரோனா அச்சம்: ஜன்னல் வழியாக குதித்து வெளியேறிய விமானி….

naveen santhakumar

இந்தியாவில் 100 ஐ நெருங்கிய புதிய வகை கொரோனா தொற்று..! 

News Editor

பரந்தூர் புதிய விமான நிலையமும்; தமிழக பொருளாதாரம் வளர்ச்சியும்..

Shanthi