இந்தியா

அயோத்தியை வந்தடைந்தது புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட ராமர் கோவில்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அயோத்தி:-

புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட மாதிரி கோவில் தற்காலிகமாக ராமர் சிலையை (ராம் லல்லா) வைப்பதற்கான டெல்லியிலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. 

அதற்கு முன்னதாக அங்குள்ள ராமர் சிலையை தற்காலிகமாக மாற்றுவதற்காக, 21 அடி உயரத்தில் 15 அடி அகலத்தில் மாதிரி கோவில் அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 25-ம் தேதி அன்று ராமர் சிலை இந்த தற்காலிக கோவிலுக்கு மாற்றப்படும். புதிய கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அங்கேயே வைத்து அதற்கான அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு ராமருக்கு முதல் ஆரத்தி எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  விபத்தில் சிக்கியவருக்கு தைரியமாக உதவிடலாம் : பரிசும் உண்டு

இந்த கோவிலானது புல்லட் புரூஃப் வசதி மட்டுமல்லாமல் வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஃபயர் ப்ரூஃப் வசதி கொண்டது. மேலும் இந்தக் கோயிலை வெப்பத்திலிருந்து  காப்பதற்காக 2 ஏர் கண்டிஷனர் வைக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இந்த ராமர் சிலை இடமாற்றம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவிற்கு வந்த உளவாளி புறாவிற்கு உரிமை கூறும் பாகிஸ்தான் விவசாயி…

naveen santhakumar

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்

News Editor

மோடிக்காக தயாராகும் பிரம்மாண்ட சொகுசு விமானம்.

naveen santhakumar