இந்தியா தொழில்நுட்பம்

Whatsapp-க்கு good bye…சொந்தமாக செயலியை உருவாக்கும் இந்தியா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய அரசு சொந்த வாட்ஸ் அப் செயலியை உருவாக்க முடிவு செய்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மூலமாக இயங்கி வரும் Whatsapp செயலியில் பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.

இதனால் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா தனது சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கி வருகிறது. தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் GIMS என்னும் இந்த செயலி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ  வாட்ஸ்அப் பேஸ்புக் பயன்படுத்த கூடாது நூதன ஜாமீன் வழங்கிய நீதிபதி… 

ஆனால் இந்த செயலி அரசு அலுவலகங்கள் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் மத்திய ,மாநில அரசுகளின் தகவல் பரிமாற்றங்கள் பாதுகாக்கப்படும். இதில் ஆங்கிலம், இந்தி உட்பட 11 இந்திய மொழிகளிலும் இடம் பெறவுள்ளது.

GIMS செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு, பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சிபிஐ, கப்பல்படை, ரயில்வே உட்பட 17 அரசு துறைகள் பங்கேற்றுள்ளன. பீட்டா வெர்ஷனில் சோதனை மூலம் 6,600 பயனாளர்கள் சுமார் 20 லட்சம் வரையிலான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இணையத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்.

naveen santhakumar

கொரோனா வைரஸால் இந்தியாவின் முதல் பலி….

naveen santhakumar

ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor